சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, செப்டம்பரில் ஆய்வு முடிவு- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்


சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி, செப்டம்பரில் ஆய்வு முடிவு- எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
x
தினத்தந்தி 24 July 2021 6:14 AM GMT (Updated: 24 July 2021 6:14 AM GMT)

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் கிடைக்க்கும் என எதிர்பார்ப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனை நடைபெற்று வருவதாக எய்ம்ஸ் இயக்குநர்ரன் தீப் குலேரியா தெரிவித்தார்.  இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:

சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3- வது கட்ட  மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் செம்படம்பர் மாதம்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும்” என்றார். 


Next Story