இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு: 9 பேர் பலி - வீடியோ


இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு: 9 பேர் பலி - வீடியோ
x
தினத்தந்தி 25 July 2021 6:22 PM IST (Updated: 25 July 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமானது. இதில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்லா,

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில்வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு உடைத்து கீழே பள்ளத்தாக்கில் விழுகிறது. இதில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமாகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சல பிரதேசத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story