மனதின் குரலுடன் ஒப்பிட்டு தடுப்பூசி மெதுவாக போடப்படுவதாக ராகுல் காந்தி சாடல்


மனதின் குரலுடன் ஒப்பிட்டு தடுப்பூசி மெதுவாக போடப்படுவதாக ராகுல் காந்தி சாடல்
x
தினத்தந்தி 25 July 2021 7:50 PM GMT (Updated: 25 July 2021 7:50 PM GMT)

மனதின் குரலுடன் ஒப்பிட்டு தடுப்பூசி மெதுவாக போடப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மிகக்குறைவான வேகத்தில் போடப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “நீங்கள் நாட்டு மக்களின் மனதின் குரலை புரிந்து கொண்டீர்களா? அப்படி புரிந்து கொண்டிருந்தால் தடுப்பூசியின் நிலை இதுபோன்று (மெதுவான வேகம்) இருந்திருக்காது” என சாடி உள்ளார்.

தடுப்பூசியின் குறைவான ேவக விகிதத்ைதக் காட்டும் வீடியோவையும், நாடு முழுவதும் தடுப்பூசி கிடைக்காமல் அல்லாடுகிற மக்கள் பற்றிய ஊடக அறிக்கைகளையும் டுவிட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Next Story