தெலுங்கானாவில் உள்ள ருத்ரேஸ்வரா கோவில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு


தெலுங்கானாவில் உள்ள ருத்ரேஸ்வரா கோவில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 1:38 AM IST (Updated: 26 July 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ருத்ரேஸ்வரா (ராமப்பா) கோவில் உள்ளது. இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தனது டுவிட்டர் தளத்தில் யுனெஸ்கோ வெளியிட்டு உள்ளது. யுனெஸ்கோவின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் ‘அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். ராமப்பா கோவில் பெரிய காகதியா வம்சத்தின் சிறப்பான கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந்த கம்பீரமான கோவில் வளாகத்தை பார்வையிடவும், அதன் மகத்துவத்தின் முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story