இந்தியா பெருமை கொள்கிறது - பவானி தேவிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

இந்தியா உங்கள் முயற்சியை கண்டு பெருமை கொள்கிறது என்று தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துக் கொண்டார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது சுற்றில் பவானி தேவி தோல்வி அடைந்தார்.
வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.
தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார்.
இந்த நிலையில் பவானி தேவியை ராகுல் காந்தி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ' உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது’ வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொறு படி..' என்று பதிவிட்டுள்ளார்.
India is proud of your effort. This is just another step towards success. https://t.co/2YEP8C0HSr
— Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2021
Related Tags :
Next Story