எடியூரப்பா வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது - சித்தராமையா பேட்டி

எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பின்னர் அவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைக்கால முதல்-மந்திரியாக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே எடியூரப்பாக ராஜினாமா செய்ததை கேட்ட அதிர்ந்து போன அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது. ஒரு ஊழல் முதல்-மந்திரி சென்றுவிட்டார், அவருக்கு பதிலாக யார் பதவியிலும் வந்தாலும் அவரும் ஊழல் தான் செய்வார். பாஜக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும். பாஜகவால் மாநில நலனுக்காக வேலை செய்ய முடியாது என்றார்.
Related Tags :
Next Story