நீங்கள் ஒரு முன்னுதாரணம்: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு


நீங்கள் ஒரு முன்னுதாரணம்: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 26 July 2021 10:47 PM IST (Updated: 26 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் பங்களிப்பை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது என தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துக் கொண்டார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது சுற்றில் பவானி தேவி தோல்வி அடைந்தார். 

வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.

தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார்.

இந்தநிலையில்,  ஒலிம்பிக் வாள்சண்டை 2வது சுற்றில் போராடி தோற்ற தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீங்கள் உங்கள் சிறந்த பங்களிப்பை கொடுத்தீர்கள்; வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம். உங்கள் பங்களிப்பை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது; இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் என பதிவிட்டுள்ளார்.
1 More update

Next Story