இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு


இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
x
தினத்தந்தி 27 July 2021 4:20 AM GMT (Updated: 27 July 2021 4:20 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை  தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகத்திலேயே இருந்தது. எனினும், கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்பட்டதால், தினசரி பாதிப்பில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “ கடந்த 24 மணி நேரத்தில் 29,689- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,98,100- ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 124- நாட்களுக்குப் பிறகு 4 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. அதேபோல், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 132- நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 415-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,21,382- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story