டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி


டெல்லியில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 27 July 2021 4:57 AM (Updated: 27 July 2021 4:57 AM)
t-max-icont-min-icon

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது.

புதுடெல்லி,

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும்  இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

இதனால், மத்திய டெல்லியின் பிரகதி மைதான், தெற்கு டெல்லியின் தௌலா கான் பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
1 More update

Next Story