தேசிய செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார் + "||" + The US Secretary of State arrived in Delhi today

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை டெல்லிக்கு வந்து சேர்ந்தார்.
புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அவர் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். 

இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசுகிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்புகளின்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
2. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம்…!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
3. கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை
கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. நாளை முழு ஊரடங்கு: சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
5. சபரிமலை அய்யப்பனுக்கு இன்று 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம்....
சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகத்தை இன்று (புதன்கிழமை) நடத்த உள்ளார்.