எடியூரப்பா பதவி விலகியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை: தேவேகவுடா

எடியூருப்பா பதவி விலகியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா அல்லேபுரா கிராமத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில பொது செயலாளராக உள்ள ரோஷன் அப்பாசின் தம்பியின் திருமணம் நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.பின்னர் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த தேவேகவுடாவிடம், எடியூரப்பா ராஜினாமா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து தேவேகவுடா கூறியதாவது:-
எனக்கு தெரியாது
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா விலகியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. பா.ஜனதா கட்சியில் தேசிய அளவில் 75 வயதை கடந்தவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்கப்படாது என்பது கட்சியின் விதிமுறை. அப்படி இருந்தும் 75 வயதை கடந்த எடியூரப்பாவுக்கு 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை கட்சி ேமலிடம் வழங்கி உள்ளது. இதற்கு எடியூரப்பா மகிழ்ச்சி அடைய வேண்டும்.கர்நாடக அடுத்த முதல்-மந்திரி யார் என்பது அக்கட்சி மேலிடம் அறிவிக்கும். அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story