ஒடிசா: 60 ஆண்டுகளாக மரக்கன்று நடும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஒடிசாவில் கடந்த 60 ஆண்டுகளாக மரக்கன்று நடும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஈடுபட்டு சுற்றுச்சூழல் காவலராக இருந்து வருகிறார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் நயாகார் பகுதியை சேர்ந்தவர் அந்தர்ஜியாமி சாஹூ (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் சுற்றுச்சூழல் ஆர்வலாகவும் உள்ளார்.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 1961ம் ஆண்டில் இருந்து நான் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
இன்றளவும் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் பணியாற்றி வருகிறேன். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என கூறியுள்ளார். அவரது முயற்சிகளுக்கு முதல் மந்திரியும் அங்கீகாரம் அளித்து உள்ளார் என வன அதிகாரி தனராஜ் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story