தகவல் -தொழில்நுட்ப நிலைக்குழு கூட்டத்தில் இருந்து பா.ஜ.க எம்.பி.க்கள் வெளிநடப்பு

பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளு மன்ற கூட்டத்தின்போது நிலைக்குழு கூட்டங்களை நடத்த முடியாது என்று கூறினார்.
புதுடெல்லி
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.நாடாளுமன்றம் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது நிலைக்குழு கூட்டங்களை நடத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி. கூட்டத்தில் இருந்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளு மன்ற கூட்டத்தின்போது குழு கூட்டங்களை நடத்த முடியாது என்று கூறினார். செவ்வாய்க்கிழமை மேலும் ஐந்து கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் சரியான நேரத்தில் அறிவிக்கப்படவில்லை என்று அவர் குறை கூறினார். தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பிய அவர், மேலும் ஐந்து பா.ஜ.க. எம்.பி.க்களுடன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
கவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 32 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடுகிறது, இதற்காக பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி"குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை" என்று மக்களவைத் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைகுழு கூட்டத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story