திரிபுராவுக்கு எம்.பி.க்களை அனுப்ப மம்தா திட்டம்


திரிபுராவுக்கு எம்.பி.க்களை அனுப்ப மம்தா திட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 8:27 PM GMT (Updated: 2021-07-29T01:57:46+05:30)

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுடெல்லி, 

திரிபுராவில் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு வெற்றிவாய்ப்பை ஆய்வு செய்வதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்டு 1-ந் தேதி, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்தநிலையில், டெல்லி சென்றுள்ள மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

திரிபுராவில் உள்ள பா.ஜனதா அரசு, எங்கள் கட்சி குழுவினரை ஓட்டலில் சிறைவைத்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இப்பிரச்சினையை கையாள கட்சி எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன், ககோலி கோஷ் ஆகியோரை 29-ந் தேதி  திரிபுராவுக்கு அனுப்பி வைக்க போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story