முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவலடை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை தெரிவித்து அவரது பதவி ராஜினாமாவுக்கு காரணமாக இருந்தார். இந்த நிலையில் பரம்பீர் சிங் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகிறது.சமீபத்தில் ஷியாம்சுந்தர் அகர்வால் என்ற கட்டுமான அதிபர் பரம்பீர்சிங் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தன்னிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டியதாக மெரின்டிரைவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் பரம்பீர் சிங் மற்றும் 7 பேரின் மீது மெரின் டிரைவர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பரம்பீர் சிங் மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராரே உத்தரவிட்டு உள்ளார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு துணை போலீஸ் கமிஷனர் நிமித் கோயல் தலைமை தாங்குகிறார். எம்.எஸ். முஜாவர் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருப்பார்.
Related Tags :
Next Story