அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையில் இணக்கமான முடிவு


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 29 July 2021 11:15 AM IST (Updated: 29 July 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்துள்ளது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீசாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதில்  5 அசாம் போலீசார்  வன்முறை மோதல்களில் கொல்லப்பட்டனர்.காலில் புல்லட் காயம் அடைந்த அசாமின் கச்சார் மாவட்ட எஸ்.பி. நிம்பல்கர் வைபவ் சந்திரகாந்த் உட்பட ஐம்பது போலீசார் காயமடைந்தனர்.

அசாம் முதல் மந்திரி  ஹிமாந்தா சர்மா டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “மிசோரம் மாநில எல்லையிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். மாநில எல்லையைக் காக்கும் போராட்டத்தில் 6 போலீசார் உயிரிழந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. உயிரிழந்த போலீசாரின்  குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இரு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அறிவுறுத்தினார். பதற்றம் நிலவும் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு மாநில முதல் மத்திரிகளையும் அமித் ஷா கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில், சுமுகமாக தீர்த்துக்கொள்ள இரு மாநில முதல் மந்திரிகளும் அமித் ஷாவிடம் உறுதியளித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் தலையிட்டதையடுத்து, அசாம் போலீசார் தாங்கள் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து விலகி, அங்கு மத்திய ரிசர்வ் போலீசாரை  நியமித்தனர்.

அசாம் மற்றும் மிசோரம் மாநில அரசுகள், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மத்திய ஆயுத போலீஸ் படைகளை (சிஏபிஎஃப்) தங்கள் எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 306 -ல் அமைதிப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

ஒரு மூத்த சிஏபிஎஃப் அதிகாரியின் கீழ் அமைதிபடையை நிறுத்துவதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்," என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார், எல்லைப் பிரச்சினையை இணக்கமாகத் தீர்ப்பதற்கான விவாதங்களைத் தொடரவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

Next Story