உலக அளவில் டுவிட்டரில் அதிக பின் தொடர்பவர்கள் கொண்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி


உலக அளவில் டுவிட்டரில் அதிக பின் தொடர்பவர்கள் கொண்டவர்கள் பட்டியலில் பிரதமர்  மோடி
x
தினத்தந்தி 29 July 2021 11:23 AM GMT (Updated: 29 July 2021 11:23 AM GMT)

உலக அளவில் அதிக டுவிட்டர் பின் தொடர்பவர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11வது இடத்தில் உள்ளார்.

புதுடெல்லி

சமூக வலைதளங்களில் இந்திய பிரதமர் மோடி எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதனால் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

உலக அளவில் அதிக டுவிட்டர் பின் தொடர்பவர்களை  கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர்  மோடி 11வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பின் தொடர்பவர்களுடன்  முதலிடத்தில் உள்ளார். 

இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பின் தொடர்பவர்களுடன்  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பிடனின் தனிப்பட்ட கணக்கில்  3.09 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர், POTUS என்ற கணக்கில் 1.28 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு 70 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் 2.63 கோடி பின்தொடர்பவர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 1.94 கோடி பின்தொடர்பவர்களும்  உள்ளனர்.

Next Story