தெலங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு


தெலங்கானாவில் சாலை விபத்து:  5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 July 2021 9:28 AM GMT (Updated: 2021-07-30T14:58:57+05:30)

தெலங்கானாவில் சாலையில் சென்ற கார் கிணற்றில் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.கரீம்நகர்,

தெலங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்டத்தில் இருந்து உஸ்னாபாத் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த கார் கரீம்நகர் பகுதியில் சின்னமுல்கனூரு என்ற கிராமத்தில் வந்தபோது, முன்னே சென்ற 2 சக்கர வாகனம் மீது மோதி விடாமல் இருக்க ஓட்டுனர் காரை திருப்பியுள்ளார்.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள ஆழமான விவசாய கிணற்றில் பாய்ந்தது. அப்போது காரில் இருந்தவர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் ஆழம் நிறைந்த கிணற்றுக்குள் கார் முழுவதுமாக மூழ்கியது. தகவல் அறிந்து கரீம்நகர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கார் மீட்கப்பட்டது.  இதில், 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.  மற்ற 2 பேரை காணவில்லை.  அவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.  அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.


Next Story