கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேரள மக்களுக்கு ராகுல்காந்தி அறிவுரை

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, கேரள மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கேரள மாநிலத்தில், தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 22 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. அதையடுத்து, அங்கு மத்திய குழு விரைந்துள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி, கேரள மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அங்குள்ள சகோதர, சகோதரிகள் கொரோனா விதிமுறைகளையும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து கவனமாக இருங்கள்’’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story