இமாச்சல பிரதேச முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்ப்பு மிரட்டல்


இமாச்சல பிரதேச முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்ப்பு மிரட்டல்
x
தினத்தந்தி 31 July 2021 1:00 AM GMT (Updated: 2021-07-31T06:30:56+05:30)

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரை தேசியக் கொடி ஏற்ற அனுதிக்க மாட்டோம்' என காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சிம்லா,

இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலருக்கு, நேற்று காலை பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதில், தன்னை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் என, அறிமுகம் செய்து கொண்டவர் கூறியதாவது:

இமாச்சலில் முதல்-மந்திரியும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாக்குர் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபின் ஒரு பகுதியாக இமாச்சல் இருந்தது.முதற்கட்டமாக பஞ்சாபை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின், இமாச்சல பிரதேசத்தையும் உறுதியாக கைப்பற்றுவோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story