கேரளாவில் மேலும் 20,624- பேருக்கு கொரோனா


கேரளாவில் மேலும் 20,624- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2021 2:14 PM GMT (Updated: 31 July 2021 2:14 PM GMT)

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று ஒரேநாளில் 20,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை  கூறியிருப்பதாவது:- கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,64,500 பேர்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இன்று 80 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 16,781ஆக உயர்ந்துள்ளது.

Next Story