ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்


ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 31 July 2021 8:55 PM IST (Updated: 31 July 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருவனந்தபுரம், 

சவுதி அரேபியா சென்ற ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது.  விமானத்தின் கண்ணாடியில் சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. சரக்குகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதால், விமான சிப்பந்திகள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து, மாற்று விமானம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர். 

Next Story