கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை: கோவா சுகாதார மந்திரி


கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை: கோவா சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 31 July 2021 10:52 PM GMT (Updated: 31 July 2021 10:52 PM GMT)

கோவா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்துக்குள் 26 கொரோனா நோயாளிகள் இறந்து விட்டதாக கடந்த மே 11-ந்தேதி மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ராணே கூறியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது அவர் திடீரென பல்டியடித்துள்ளார். அதாவது மாநிலத்தில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என அவரே தெரிவித்து உள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத் சட்டசபையில் எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் ராணே பதிலளித்திருந்தார். அதில் அவர், ‘கோவா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு நோயாளியும் மரணமடையவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த மருத்துவக்கல்லூரியில் எந்த நேரத்திலும் ஆக்ஸிஜன் வினியோகம் தீரவில்லை எனக்கூறிய அவர், இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

தனது சொந்த கருத்தையே மாற்றி பேசியிருக்கும் கோவா மந்திரியின் செயல் எதிர்க்கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story