தேசிய செய்திகள்

மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்: மேகாலயா பா.ஜ.க. மந்திரி + "||" + Meghalaya BJP Minister Sanbor Shullai asks people to eat more beef than any other meat

மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்: மேகாலயா பா.ஜ.க. மந்திரி

மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்: மேகாலயா பா.ஜ.க. மந்திரி
மேகாலயாவில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கன்ராட் சங்மா முதல்-மந்திரியாக உள்ளார். அவரது தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி அரசில் கடந்த வாரம் கேபினட் மந்திரியாக பதவி ஏற்றவர், சன்பார் சுல்லை. இவர் கால்நடை பராமரிப்புத்துறையை கவனிக்கிறார்.
இவர் ஷில்லாங்கில் நிருபர்களிடம் பேசியபோது, “கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீனை விட மக்கள் அதிகளவில் மாட்டிறைச்சி சாப்பிட நான் ஊக்குவிக்கிறேன். மக்களை அதிகளவில் மாட்டிறைச்சி சாப்பிட ஊக்குவிப்பதன்மூலம், பா.ஜ.க. பசுவதையை தடை செய்யும் என்ற கருத்து அகன்று விடும்” என குறிப்பிட்டார்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.