ஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு


ஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 1 Aug 2021 1:08 AM GMT (Updated: 1 Aug 2021 1:08 AM GMT)

ஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும் கேரள வியாபாரிகள் சங்கம் ஐகோர்ட்டில் மனு

மூணாறு,

கேரளாவில் ஏகோபன சமிதி என்ற பெயரில் வியாபாரிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ராஜுஅப்சரா கொரோனா ஊரடங்கு உத்தரவை எதிர்த்து எர்ணாகுளம் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிலச்சரிவு, புயல் என பெரிய இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது, அதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள், 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மாநிலத்தில் உள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவை அரசு வாபஸ் பெற உத்தரவிட வேண்டும், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சிறப்பு நலத்திட்டத்தை அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும். 

பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு வரி சலுகைகள் வழங்க வேண்டும். வியாபாரிகள் வாங்கி உள்ள வங்கி கடனுக்கு வட்டி சலுகை வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசு அனைத்து வங்கிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story