தேசிய செய்திகள்

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின + "||" + Thiruvananthapuram | Complete lockdown imposed in Kerala this weekend due to rising COVID19 cases in the state

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின

கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்; சாலைகள் வெறிச்சோடின
கேரளாவில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்திற்கும் மேல் சென்றுள்ளது.  இதேபோன்று மொத்த பலி எண்ணிக்கையும் 16 ஆயிரத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை.  தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்வடைந்து வருகிறது.  இதனை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, இன்றும், நாளையும் (ஆகஸ்டு 1ந்தேதி) 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு நேற்றும் கடைபிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த நாட்களில் மக்கள் அவசியமின்றி வெளியே வர தடை விதிக்கப்படுவதுடன், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.  மக்கள் கூட்டமும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,73,631 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு
கேரளாவில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 19,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,80,842 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 23,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,88,926 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கேரளாவில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 178 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.