ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை


ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 2 Aug 2021 12:50 AM GMT (Updated: 2021-08-02T06:20:40+05:30)

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலின் படி, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என தெரிய வந்துள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். பண்டிகைகள், தேசிய விழா நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை தினம். மேலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. இந்த மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப, 13ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை பல விடுமுறை நாட்கள் உள்ளன.

அதன்படி, இம்மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளையும் சேர்த்து 15 நாட்கள் விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இம்பாலில், 13ம் தேதி தேசபக்தர் நாள் என்பதால் வங்கிகள் செயல்படாது.

மொகரமையொட்டி  சில மாநிலங்களில் 19ம் தேதியும், சில மாநிலங்களில், 20ம் தேதியும் வங்கிகள் செயல்படாது.அதுபோல ஓணம், பார்சி புத்தாண்டு, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story