கொரோனா தளர்வுகள்; சத்தீஷ்காரில் ஓராண்டுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு

சத்தீஷ்காரில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் ஓராண்டுக்கு பின் சில பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
ராய்ப்பூர்,
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. பல மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சத்தீஷ்காரிலும் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனை முன்னிட்டு சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் உள்ள சில பள்ளிகள் ஓராண்டுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனை முன்னிட்டு மாணவ மாணவியர் சீருடை அணிந்து, முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
இதுபற்றி பள்ளி ஒன்றின் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எங்களுடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திப்பதில் ஆச்சரியமடைந்து உள்ளோம். நீண்ட நாட்களுக்கு பின் நாங்கள் பள்ளிக்கு வந்துள்ளோம். இது நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story