உத்தர பிரதேசத்தில் இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறக்க அரசு முடிவு


உத்தர பிரதேசத்தில் இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறக்க அரசு முடிவு
x
தினத்தந்தி 2 Aug 2021 9:24 AM GMT (Updated: 2021-08-02T14:54:39+05:30)

உத்தர பிரதேசத்தில் இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் குறைவை முன்னிட்டு இடைநிலை பள்ளிகளை வருகிற 16ந்தேதி முதல் திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, 50% அளவுக்கு மாணவ மாணவியரை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களை வருகிற செப்டம்பர் 1ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.  இதற்காக வருகிற 5ந்தேதி முதல் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடைமுறையை தொடங்கும்படி அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
Next Story