நடுரோட்டில் கார் டிரைவரை சரமாரியாக தாக்கிய பெண்..! கைது செய்ய எழும் கோரிக்கை


நடுரோட்டில் கார் டிரைவரை  சரமாரியாக தாக்கிய பெண்..! கைது செய்ய எழும் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2021 11:34 AM GMT (Updated: 2021-08-02T17:48:22+05:30)

எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்ட அந்த டிரைவரின் செல்போனையும் பிடுங்கி அந்த பெண் உடைத்தார்

லக்னோ: 

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கார் ஓட்டுனரை பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசம் லக்னோவில்  அவாத் பகுதி போக்குவரத்து சிக்னல் அருகே பாத சாரிகள் பாதையை கடக்கும் அந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் தன் மீது மோதியதாக கூறும் பெண் போக்குவரத்து போலீஸ்  முன்னிலையிலேயே அந்த கார் டிரைவரை  சரமாரியாக தாக்கினார்.

எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்ட அந்த டிரைவரின் செல்போனையும் பிடுங்கி அந்த பெண் உடைத்தார். தட்டிக்கேட்டவர்களிடமும் அந்த பெண் தகராறில் ஈடுபட்டார். இது குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகாத நிலையில் #ArrestLucknowGirl என்ற ஹாஸ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.


Next Story