கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 % ஆக குறைந்தது


கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 % ஆக குறைந்தது
x
தினத்தந்தி 2 Aug 2021 2:34 PM GMT (Updated: 2021-08-02T20:04:14+05:30)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளாதான் முதலிடத்தில் உள்ளது.  இந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. 

கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13, 984-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,27,903- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 10.93- சதவிகிதமாக குறைந்துள்ளது.

 கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,65,322- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,923- ஆகும்.  கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 118- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,955 ஆக உள்ளது. 

Next Story