ஒவ்வொரு இந்தியருக்கும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன - மோடி பெருமிதம்

இந்தியா, ஆகஸ்டு மாதத்தில் நுழைந்துள்ளது. ‘அம்ருத் மகோத்சவ்’ தொடங்கி இருக்கிறது.
புதுடெல்லி,
நாட்டின் 75-வது சுதந்திர தினம் அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓராண்டு காலத்துக்கு ‘அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரிலான கொண்டாட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியா, ஆகஸ்டு மாதத்தில் நுழைந்துள்ளது. ‘அம்ருத் மகோத்சவ்’ தொடங்கி இருக்கிறது.
இந்த நேரத்தில், ஒவ்வொரு இந்தியரின் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வுகள் நடந்து வகின்றன. கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை, பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்ததை குறிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிப்பு, பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சம்பவம், ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகளின் சிறப்பான ஆட்டம் என நெஞ்சைத்தொடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
75-வது சுதந்திர தின விழா கொண்டாடும் காலகட்டத்தில், இந்தியா புதிய உச்சத்தை எட்டும் வகையில் 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடுமையாக பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story