சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது


சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
x
தினத்தந்தி 3 Aug 2021 5:53 AM GMT (Updated: 2021-08-03T11:23:34+05:30)

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகிறது.

புதுடெல்லி,

கொரோனா 2வது அலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்கள் cbseresults.nic.in , cbse.gov.in இல் காணலாம். அல்லது Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story