பயணிகள் வரத்து குறைவு; சாம்ராஜ்நகர்-கேரளா இடையே பஸ் சேவை நிறுத்தம்


பயணிகள் வரத்து குறைவு; சாம்ராஜ்நகர்-கேரளா இடையே பஸ் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Aug 2021 1:32 AM IST (Updated: 4 Aug 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் வரத்து குறைவால் கேரளா-சாம்ராஜ்நகர் இடையே அரசு பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக கேரளாவில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு வருவோர் மற்றும் இங்கிருந்து கேரளா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக குறைந்துவிட்டது. இதனால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ் சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 

பயணிகள் வரத்து குறைவால் கேரளா-சாம்ராஜ்நகர் இடையே அரசு பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) அதிகாரிகள் தெரிவித்தனர். சாம்ராஜ்நகரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி, கல்பெட்டா, கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கர்நாடக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story