நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் கூட்டாக தீர்வு காண வேண்டும் - வெங்கையா நாயுடு யோசனை


நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் கூட்டாக தீர்வு காண வேண்டும் - வெங்கையா நாயுடு யோசனை
x
தினத்தந்தி 4 Aug 2021 3:52 AM IST (Updated: 4 Aug 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் கூட்டாக தீர்வு காண வேண்டும் என்று வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுகேட்பு பிரச்சினையை எழுப்பி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், எந்த அலுவலும் நடத்த முடியவில்லை.

இந்தநிலையில், நேற்று மாநிலங்களவை முதல் தடவை ஒத்திவைக்கப்பட்டவுடன், நாடாளுமன்ற முடக்கம் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சபை தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். சபையை சுமுகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசித்ததாக தெரிகிறது.

நேற்று மாலையில் வெங்கயைா நாயுடு ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம், நாடாளுமன்றம் முடக்கப்படும் பிரச்சினைக்கு மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி, கூட்டாக தீர்வு காண வேண்டும் என்று வெங்கயைா நாயுடு யோசனை தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story