திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.2.5 கோடி காணிக்கை

திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் கடந்த திங்கள்கிழமையன்று ரூ.2 கோடியே 58 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். திங்களன்று 20 ஆயிரத்து 609 பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 117 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 58 லட்சம் இருந்தது.
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில், கவுஸ்துபாம், எம்.பி.சி., சி.ஆர்.ஓ,. அலுவலகத்தில் அறைகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story