நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன; மத்திய அரசு


நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன; மத்திய அரசு
x
தினத்தந்தி 4 Aug 2021 5:22 PM GMT (Updated: 2021-08-04T22:52:51+05:30)

நாடு முழுவதும் இதுவரைவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இதுவரைவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 48.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 38,07,92,729 கோடி பேருக்கும், இரண்டாது தவணையாக 10,81,43,694 கோடி பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story