தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு + "||" + Uttar Pradesh Chief Minister Yogi Adityanath also reviewed the progress of construction work of the Ram temple.

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து  முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு
அயோத்தியில் ராமர் கோவிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து உ..பி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அயோத்தி,

அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. இது உலகமெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்லை எடுத்துக்கொடுத்து கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தக் கோவில்அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் என்ஜினீயர்கள், கட்டுமான வல்லுனர்கள் கடந்த மாதம் 2 நாட்கள் கூடிப்பேசினர். அப்போது ராமர் கோவிலை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக 2025 இறுதியில்தான் முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிவடையும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், 360 தூண்கள் என மிக பிரமாண்டமாக உருவாகப்போகிறது.

இந்நிலையில், அயோத்தி சென்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலின் மாதிரியை பார்வையிட்டு தரிசனம் செய்தார். அதன் பின்னர் ராமர் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தையும் குறித்து ஆய்வு செய்தார். அதன்பின்னர் அயோத்தியில் உள்ள ராம ஜன்மபூமி தளத்தில் ராம் லல்லாவிற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.