2½ கோடி ‘ஸ்புட்னிக் ’ தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை டெல்லி நிறுவனம் தகவல்

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தடுப்பூசியும், ரஷிய தயாரிப்புமான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பனாசியா பயோடெக் நிறுவனமும் 2½ கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க ரஷியாவின் ஜெனரியம் நிறுவனம், இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, ஜெனரியம் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து பொருளை கொண்டு இந்த தடுப்பூசியை பனாசியா பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும். குறிப்பாக, நிறைத்தல் மற்றும் முழுமைப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வினியோகிப்பதற்காக டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அவற்றை வழங்கும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story