பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி

ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியில், பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஆக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில்,
ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம். ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும். இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story