இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி: மத்திய அரசு


இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி:  மத்திய அரசு
x
தினத்தந்தி 6 Aug 2021 11:04 PM IST (Updated: 6 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்துள்ளது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,

நாட்டில் 50 கோடிக்கும் கூடுதலானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி என்ற மைல்கல்லை (50,03,48,866) கடந்துள்ளது

அந்த அறிக்கையின்படி, 43.29 லட்சத்திற்கும் கூடுதலான (43,29,673) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.  18-44 வயது பிரிவில் இதுவரை 17,23,20,394 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 1,12,56,317 பயனாளிகள் தங்களது 2வது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.

மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மராட்டியம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் ஒரு கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இதுவரை செலுத்தியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 38,94,75,520 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 11,08,73,346 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story