18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்-அடார் பூனாவாலா


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்-அடார் பூனாவாலா
x
தினத்தந்தி 7 Aug 2021 7:47 AM GMT (Updated: 2021-08-07T13:17:46+05:30)

கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எங்களுக்கு நிதி நெருக்கடி எதுவும் இல்லை.  மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. 

அமெரிக்காவை சேர்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அக்டோபர் மாதமும், சிறுவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளும் அறிமுகப்படும் என்று கூறினார்.


Next Story