பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்: தனது உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்


பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்: தனது உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்
x
தினத்தந்தி 7 Aug 2021 8:27 AM GMT (Updated: 2021-08-07T14:33:00+05:30)

பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதுடெல்லி

இமாசல பிரதேசத்தில் பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை தனது உயிரை பணயம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இமாசலப் பிரதேச சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று  சென்று கொண்டிருந்த்து. தேசிய நெடுஞ்சாலை 707 இல் பொஹ்ராட் காட் அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது திடீர் என பஸ்சின்  டயர்  வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய பஸ்  சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்தது.

ஆனால் உடனடியாக சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்து சாலைக்கும் பள்ளத்தாக்கிற்கும் இடையே தொங்கியது.

அத்துடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பஸ்சை  டிரைவர் கட்டுக்குள் கொண்டு வந்து பயணிகள் 22பேரும் வெளியேறும் வரை பிடித்து வைத்திருந்தார். பஸ்சில்  இருந்து வெளியேறிய பயணிகள் பிறகு டிரைவரை பத்திரமாக மீட்டதாக கூறப்படுகிறது. 

Next Story