நடிகர் அமிதாப்பச்சன் வீடு - 3 ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


நடிகர் அமிதாப்பச்சன் வீடு - 3 ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 8:50 AM GMT (Updated: 2021-08-07T14:20:24+05:30)

மும்பை காவல்துறை நடிகர் அமிதாப்பச்சன் வீடு மற்றும் 3 ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மும்பை

மும்பையின் சிஎஸ்டி, பைக்குல்லா, தாதர் ரெயில் நிலையங்கள் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் போலீசாருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் அமிதாப்பச்சனின் நான்கு பங்களாக்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அமிதாப்பச்சன் வீட்டில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்கள்  இருவரும் மது போதையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Next Story