கேரளாவில் மேலும் 20,367- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 139- பேர் வைரஸ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் கட்டுக்குள் வரமறுக்கிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக உள்ள கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,367- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 33 ஆயிரத்து 918- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 521- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 13.55 சதவிகிதமாக உள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,265- ஆக உள்ளது.
மொத்தம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 37 ஆயிரத்து 579- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 166- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 139- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,564- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story