2017ல் பொருட்களை பறிகொடுத்த பயணி;ரூ.17.5 லட்சம் இழப்பீடு வழங்க தென்னக ரெயில்வேக்கு உத்தரவு

தனதுபொருட்களை பறிகொடுத்த பயணிக்கு ரெயில்வே நிர்வாகம் 17.5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஐதராபாத் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்
ஐதராபாத் பகுதியை சேர்ந்த ஷீட்டல் குல்கர்னி. கடந்த 2017, ஆகஸ்ட் 12ம் தேதி குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பெங்களூரு சென்றுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான 15 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள், 3 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் தனது சூட்கேசில் வைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது சூட்கேஸை அடிப்பக்கமாக அறுத்து கொள்ளையர்கள் பணம் நகையை கொள்ளையடித்து உள்ளனர். குல்கர்னி வீடு சென்ற பிறகே தனது சூட்கேசில் இருந்த பணம் மற்ரும் நகை திருட்டு போனது தெரிந்துள்ளது.
உடனடியாக இது தொடர்பாக எஸ்வந்த்பூர் ஊரக ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அவர்கள் முறைப்படி அந்த வழக்கின் நிலை குறித்து புகார்தாரர் தரப்புக்கு பதில் ஏதும் சொல்லாத காரணத்தினால் குல்கர்னி நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளார். அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரெயில்வே நிர்வாகம் 17.5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story