பிரதமர் மோடி தலைமையில் நாளை ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் நாளை ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2021 5:57 PM GMT (Updated: 2021-08-08T23:27:01+05:30)

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நாளை (9 ம் தேதி ) நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா., பாதுகாப்பு சபை கூட்டம் நாளை (09 ம் தேதி திங்கள் கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர். ரஷ்யா நாட்டின் சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story