அசாமில் 2 நாட்களில் 46 போடோ பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சரண்

அசாமில் கடந்த 2 நாட்களில் 46 போடோ பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் போடோ அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி பயங்கரவாத இயக்கம் சரண் அடைந்தது. ஆனால், அதன் அதிருப்தி உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு, போடோலாந்து தேசிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினர்.
ஆனால், கடந்த மாதம், அதன் தலைவர் பத்தா உள்ளிட்ட 23 பயங்கரவாதிகள் சரணடைந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் கோக்ரஜார் மாவட்டத்தில் 14 பயங்கரவாதிகள் சரணடைந்தனர். நேற்று மேலும் 32 பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
6 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்களை அவர்கள் ஒப்படைத்தனர். மற்ற பயங்கரவாதிகளும் விரைவில் சரணடைவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story