மனித உரிமைகளுக்கு காவல் நிலையங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி


மனித உரிமைகளுக்கு காவல் நிலையங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 9 Aug 2021 10:45 AM GMT (Updated: 2021-08-09T16:15:22+05:30)

மனித உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக காவல் நிலையங்கள் உள்ளன என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதின் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் புனிதமாக இருக்கவேண்டிய காவல் நிலையங்கள்தான் மனித உரிமைகளுக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் விளைவிக்கும் இடமாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என்.வி ரமணா கூறியதாவது:- “நாட்டில் புனிதமாக இருக்க வேண்டிய காவல் நிலையங்கள் மனித உரிமைகளுக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, சமூகத்தில் சிறப்பு சலுகை பெற்றவர்கள்கூட போலீஸாரின் 3-ம் தரமான நடத்தையிலிருந்து தப்பவில்லை. அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தும், உரிமைகள் அளித்தும், போலீஸ் கஸ்டடி கொடுமை, போலீஸ் அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன.

நீதிமன்றங்கள் அதிகம் செலவாகக்கூடிய செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதால், ஏழைகளும், பாதிக்கப்படக்கூடிய பிரிவில் உள்ள மக்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விலகிவிடுவார்கள். இந்தத் தடைகளைத் தகர்ப்பதுதான் நீதித்துறையின் கடினமான சவாலாக இன்று இருக்கிறது” என்றார். 

Next Story