பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் வர்த்தகம் இல்லை- மத்திய அரசு விளக்கம்

பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெற வில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்
பெகாசஸ் சர்ச்சை ஏன்?
பெகாசஸ் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கியுள்ள உளவு மென்பொருள். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோரை 2016-லிருந்து உளவுபார்த்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆயினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசுகள் இத்தகைய உளவுக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுக்கின்றன. குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த உளவு மென்பொருளைத் தாங்கள் விற்பதாக என்.எஸ்.ஓ. கூறியிருக்கிறது. ஆனால், இது குறித்து சர்வதேச புலனாய்வு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் வெவ்வேறு நாடுகளின் எதிர்க் கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்றோர் இந்த மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று சர்ச்சை எழுந்தது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நாடளுமன்றத்தை எதிர்க்கட்சி்கள் முடக்கி வருகின்றன.
Related Tags :
Next Story